விஜய் பக்கம் சாயும் பாமக ராமதாஸ் அணி: அருள் எம்எல்ஏ சூசகம்

சேலம்: அதிமுக, பாஜ அடங்கிய தே.ஜ. கூட்டணியில் பாமகவின் அன்புமணி அணி சேர்ந்துகொண்டது. இந்நிலையில் பாமக ராமதாஸ் தரப்பு தற்போது விஜய்யின் தவெக பக்கம் சாய்ந்து வருவது தெரியவந்திருக்கிறது. நேற்று காலை தவெக தலைமை நிலைய ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், பாமகவுடன் (ராமதாஸ் அணி) கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக தெரிவித்திருந்தார்.

இச்சூழலில் பாமக ராமதாஸ் அணி இணை பொதுச்செயலாளர் அருள் எம்எல்ஏ. நேற்று மதியம் சேலத்தில் அளித்த பேட்டியில், அரசியல் கட்சி என்றால் பலவிதமான கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தும். அதில், எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. பாமகவை பொருத்தவரை ராமதாஸ் அமைக்கும் கூட்டணியே வெற்றி பெறும். இன்னும் ஒரு வாரத்தில் கூட்டணி இறுதி செய்யப்படும் என்றார்.

தொடர்ந்து, விஜய்யுடன் கூட்டணி பேச்சு நடக்கிறதா? என்ற கேள்விக்கு, விஜய்யுடன் இருக்கும் இளைஞர்கள் தேனீயை போன்று சுற்றி சுழன்று வருகிறார்கள். அவருக்கு மக்கள் ஓட்டு போட்டு முதலமைச்சர் ஆக்கினால், யாரு தடுக்க முடியும். 2 கட்சிக்கு மாற்றாக அவர் தான் வரட்டுமே. அது ஒன்னும் தப்பில்லையே என்றார்.

Related Stories: