‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற பெயரில் 234 சட்டமன்ற தொகுதிகளில் பிப்ரவரி மாதம் பரப்புரை: திமுக பொதுச்செயலாளர் அறிவிப்பு

சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 20ம் தேதி நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற பரப்புரை பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளது.

இந்த பரப்புரையின் கீழ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நட்சத்திரப் பரப்புரையாளர்கள், தமிழகத்திலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், பிப்ரவரி மாதம் முழுவதும் தீவிரமான பரப்புரை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்கள்.

இந்த பரப்புரையின் போது, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும், ஒரு பொதுக் கூட்டம் நடத்திட வேண்டும். மேலும், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், இளைஞர்கள், மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தொழில் முனைவோர், கல்வியாளர்கள் உள்ளிட்டோரை ஒரே இடத்தில் அழைத்து, மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள்,

பொறுப்பாளர்கள் மற்றும் நட்சத்திரப் பரப்புரையாளர்கள் அரசின் சாதனைகளை எடுத்துக்கூறியும், கலந்துகொள்வோரின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் குறித்தும் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும். தொகுதிகளில் தேவையான ஏற்பாடுகளைச் செய்திடவும் மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வருகிற 1ம் தேதி திருப்போரூரில் சபாபதி மோகன், ராயபுரம்- திண்டுக்கல் ஐ.லியோனி, திருவள்ளூர்- இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. பேசுகின்றனர். 2ம் தேதி செங்கல்பட்டு-திண்டுக்கல் ஐ.லியோனி, ஆயிரம் விளக்கு- எம்.எம்.அப்துல்லா, பூந்தமல்லி-இனிகோ இருதயராஜ், 3ம் தேதி மயிலாப்பூர்-தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., சேப்பாக்கம் திருவல்லிக்கேணி-எம்.எம். அப்துல்லா, திரு.வி.க.நகர்-இனிகோ இருதயராஜ், பல்லாவரம்-எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ. பேசுகின்றனர்.

4ம் தேதி வேளச்சேரி-தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி, 5ம் தேதி திருத்தணி-எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி., மதுரவாயல்-கனிமொழி என்.வி.என்.சோமு எம்.பி. 6ம் தேதி ஸ்ரீபெரும்புதூர்-எஸ்.ஜெகத்ரட்சகன், ஆவடி-கலாநிதி வீராசாமி எம்.பி, அம்பத்தூர்-கனிமொழி என்.வி.என்.சோமு எம்.பி, 16ம் தேதி துறைமுகம்-எம்.எம். அப்துல்லா, உத்திரமேரூர்-எழிலன் நாகநாதன், எம்.எல்.ஏ., டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்-கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், 17ம் தேதி அண்ணா நகர்- கனிமொழி என்.வி.என்.சோமு,

காஞ்சிபுரம்-எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., 19ம் தேதி ஆலந்தூர்-கனிமொழி என்.வி.என்.சோமு, 20ம் தேதி மாதவரம்- கனிமொழி என்.வி.என்.சோமு, தியாகராயர் நகர்-எழிலன் நாகநாதன், 21ம் தேதி சைதாப்பேட்டை-தமிழச்சி தங்கபாண்டியன், வில்லிவாக்கம்-கனிமொழி என்.வி.என்.சோமு, 23ம் தேதி சோழிங்கநல்லூர்-எஸ்.ஜெகத்ரட்சகன், 23ம் தேதி பெரம்பூர்-கலாநிதி வீராசாமி, 24ம் தேதி தாம்பரம்-கலாநிதி வீராசாமி, 28ம் தேதி-திருவொற்றியூர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பேசுகிறார். இதேபோல மற்ற தொகுதிகளில் பேசுவோர் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: