கோவை கொடீசியா வளாகத்தில் ஜவுளி தொழில் மாநாடு

சென்னை: ஜவுளித் துறையில் சர்வதேச முதலீடுகளை ஈர்க்க, தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியோர் இணைந்து நடத்தும் முதலாவது ஜவுளி தொழில் மாநாடு கோயம்புத்தூர் மாநகரின் கொடீசியா வளாகத்தில் நாளை முதல் 30ம் தேதி வரைஇரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டினை தமிழ்நாடு முதல்வர் நாளை காணொலி வாயிலாக துவக்கி வைக்கிறார்.

கண்காட்சி, அழகு நயப்பு காட்சி, வாங்குவோர் விற்போர் சந்திப்பு, ஐந்து கருத்தரங்குகள் மற்றும் விருதுநகர் பகுதியில் அமைய உள்ள PM-MITRA ஜவுளிப் பூங்கா தொடர்பான விழிப்புணர்வுக்கான ரோடுஷோ ஆகியவை நடைபெறவுள்ளன. இம்மாநாட்டின் தொடக்க விழாவில் தமிழ்நாடு துணை முதல்வர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

மேலும் ஜவுளித் தொழில் முனைவோர்களுக்கான சிறந்த ஏற்றுமதியாளர் விருதுகள் 2025-26 துணிநூல் துறை மற்றும் கைத்தறி துறை ஆகியவற்றால் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு மானியங்கள் ஆகியற்றை வழங்கவுள்ளார். இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: