கயத்தாறு, ஜன. 10:தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக, கயத்தாறு ஒருங்கிணைந்த ஒன்றிய திமுக சார்பில் சமூக நீதிக்கான திராவிட பொங்கல் விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு நடந்த பெண்களுக்கான மராத்தான் போட்டியை கயத்தாறு மத்திய ஒன்றிய செயலாளர் கருப்பசாமி கொடியசைத்து துவக்கிவைத்தார். போட்டியில் முதல் இடத்தை பன்னீர்குளம் முத்துலட்சுமி, 2ம் இடத்தை ராஜாபுதுக்குடி மாலினி, 3ம் இடத்தை சாலைப்புதூர் உமா ஆகியோர் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் கே.கே.ஆர்.அய்யாத்துரை, ரொக்கப்பரிசு மற்றும் வெற்றி கோப்பைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கயத்தாறு பேரூர் செயலாளர் சுரேஷ் கண்ணன், திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கருணாநிதி, மாவட்ட ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் ஜெபசிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அகிலாண்டபுரத்தில் பெண்களுக்கான மராத்தான் போட்டி
- பெண்கள் மராத்தான் போட்டி
- அகிலாண்டபுரம்
- கயத்தாறில்
- தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க
- கயத்தார் ஒருங்கிணைந்த ஒன்றிய தி.மு.க.
- சமூக நீதிக்கான திராவிட பொங்கல் விளையாட்டுப் போட்டிகள்
- கயத்தார் மத்திய ஒன்றியம்
- கருப்பசாமி
