துணை ராணுவ படையினர் அணிவகுப்பு கீழ்பென்னாத்தூரில் தேர்தலை முன்னிட்டு

கீழ்பென்னாத்தூர், மார்ச் 12: கீழ்பென்னாத்தூரில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நேற்று துணை ராணுவ படை வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், தேர்தல் அமைதியான முறையில் நடக்கவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையிலும் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நேற்று முன்தினம் நடந்தது. கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில் தொடங்கிய ஊர்வலம் திண்டிவனம் சாலை, அவலூர்பேட்டை சாலை, வேட்டவலம் சாலை மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட கருங்காலிகுப்பம் முக்கிய வீதி முழுவதும் ஊர்வலம் நடைபெற்று காவல் நிலையத்தை அடைந்தது. மத்திய போலீஸ் பாதுகாப்பு படை மற்றும் கீழ்பென்னாத்தூர் போலீசார் இணைந்து ஊர்வலத்தை நடத்தினர். முன்னதாக, சோமாசிபாடி, கோவில்மேடு, மேக்களூர் ஆகிய பகுதிகளில் துணை ராணுவ படை வீரர்கள் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில், கீழ்பென்னாத்தூர் காவல் ஆய்வாளர் லட்சுமி, உதவி தளபதி அனில்செவுகான், இன்ஸ்பெக்டர்கள் க.பாண்டுரங்கன், இரா.கவிதா, குமார் மற்றும் பாலாஜி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Related Stories: