ஊரக திறனாய்வு தேர்வில் வெற்றி முதன்மை கல்வி அலுவலர் பாராட்டு தண்டராம்பட்டு அரசு பள்ளி மாணவர்கள்

தண்டராம்பட்டு, மார்ச் 12: அரசுப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்களின் இடைநிற்றலை தடுக்கவும், அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் 6ம் தேதி ஊரகத் திறனாய்வு தேர்வு நடந்தது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த 5ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவன் மோகன் மாவட்ட அளவில் 3ம் இடமும், பிரவீன் மாவட்ட அளவில் 7ம் இடமும், மோகன்ராஜ், மனோஜ் ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்நிலையில், வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.முனிராஜ் நேற்று முன்தினம் நேரில் அழைத்து கேடயம் வழங்கி பாராட்டினார். அப்போது, பள்ளி தலைமை ஆசிரியர் முகமது மைனுத்தீன், உதவித் தலைமை ஆசிரியர் கருணாகரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பள்ளி மேனாள் உடனிருந்தனர்.

Related Stories: