ஓட்டப்பிடாரம், ஜன. 10: கனிமொழி எம்பி பிறந்த நாளையொட்டி தருவைகுளம் அருகே அங்கன்வாடி மையங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா மற்றும் நிர்வாகிகள் வழங்கினர். திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பியின் பிறந்த நாளையொட்டி ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் பிறந்த 5 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களையும் ஒன்றிய செயலாளர் இளையராஜா வழங்கினார். இதேபோல் நேற்று தருவைகுளம் அருகே கீழ அரசடி ஊராட்சி துப்பாஸ்பட்டி, வெள்ளப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மைய குழந்தைகளுடன் இணைந்து கேக் வெட்டியும், 91 குழந்தைகளுக்கான அத்தியாவசிய பொருட்களையும் ஒன்றிய செயலாளர் இளையராஜா மற்றும் நிர்வாகிகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர் சுப்பிரமணியன், துணை செயலாளர் வேல்ராஜ் மற்றும் நிர்வாகிகள் அனிட்டன், பேச்சிராஜ், ஆலோசனை மரியான், மிக்கேல், அந்தோணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கனிமொழி எம்பி பிறந்த நாளையொட்டி அங்கன்வாடி மையத்திற்கு அத்தியாவசிய பொருட்கள்
- அங்கன்வாடி மையங்கள்
- கனிமொழி எம்.பி.
- ஓட்டப்பிடாரம்
- வடஒன்றியம்
- திமுக
- இளையராஜா
- அங்கன்வாடி
- தருவைகுளம்
- பிரதி பொது செயலாளர்
