மாணவிகள் 120 பேருக்கு இலவச சைக்கிள் எம்எல்ஏ வழங்கினார் பெரணமல்லூர் அரசு பள்ளி

பெரணமல்லூர், ஜன.10: பெரணமல்லூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நேற்று முன்தினம் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை மீனாட்சி தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏ பாண்டுரங்கன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி தலைவர் வேணிஏழுமலை வரவேற்றார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் கலந்து கொண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்1 படிக்கும் மாணவிகள் சுமார் 120 பேருக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார். தொடர்ந்து பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தமிழில் 100 மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி வாழ்த்தினார்.‌ இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியைகள் மற்றும் மாணவிகள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: