கலசப்பாக்கம், ஜன. 10: மலர்கள் அதிகம் விவசாயிகள் சாகுபடி செய்வதால் கீழ்பென்னாத்தூர் தொகுதியில் மலர் சாகுபடி நிலையம் அமைத்து தர வேண்டும் என சவுமியா அன்புமணி பேசினார். திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் மங்கலம் கிராமத்தில் பாமக சார்பில் தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாமக தெற்கு மாவட்ட செயலாளர் பத்வாசலம் தலைமை தாங்கினார். தொகுதி பொறுப்பாளர் பழனிவேல், ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். மாநில மகளிர் அணி செயலாளர் நிர்மலா ராஜா வரவேற்றார். பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி பேசியதாவது: நந்தன் கால்வாய் திட்டத்தின் கீழ் 50 ஆண்டு காலமாக கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளது. அதனை உடனே நிறைவேற்றிட வேண்டும். கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் தோட்ட பயிரான மலர் வகைகளை விவசாயிகள் சாகுபடி செய்கிறனர். விவசாயிகளின் நலன் கருதி மலர் சாகுபடி மையம் தொடங்க வேண்டும். அதேபோல் விவசாயிகள் அதிகம் உள்ளதால் வேளாண் கல்லூரி இப்பகுதியில் தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மலர் சாகுபடி நிலையம் அமைக்க வேண்டும் சவுமியா அன்புமணி பேச்சு கீழ்பென்னாத்தூர் தொகுதியில்
- சௌம்யா அன்புமணி
- Kilpennathur
- Kalasappakkam
- மங்கலம்
- Durinjapuram
- திருவண்ணாமலை மாவட்டம்
- தமிழ்நாடு மகளிர் கட்சி
- பா.ம.க.
