புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட பொதுமக்களுக்கு மாசுக் கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள்!!

சென்னை: புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட பொதுமக்களுக்கு மாசுக் கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. டயர், டியூப் போன்றவற்றை எரிப்பதால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் ஏற்படும். சென்னையில் போகிப் பண்டிகை நாளில் 15 இடங்களில் 24 மணிநேரமும் காற்றின் தரத்தை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பிளாஸ்டிக், டயர், டியூப் போன்றவற்றை எரிக்காமல் போகிப் பண்டிகையை கொண்டாட வேண்டும். போகிப் பண்டிகை அன்று காற்று மாதிரி சேகரித்து ஆய்வு செய்து, காற்றின் தர அளவு இணையத்தில் வெளியிடப்படும் என மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

Related Stories: