செல்வபெருந்தகை பேட்டி இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கிறது

சென்னை: இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கிறது என்று செல்வபெருந்தகை கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் மாநில செயற்குழு கூட்டம் சத்திய மூர்த்தி பவனில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் நவின் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் அகில இந்திய தலைவர் அனில் ஜெய்ஹிந்த், கிரீஷ் சோடங்கர், சூரஹ் ஹெக்டே, ஆல்வா, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் செல்வபெருந்தகை அளித்த பேட்டியில், “ உள்துறை மந்திரி அமித்ஷா 1,000 முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும், தமிழ்நாட்டு மண் பாஜகவுக்கான மண் இல்லை. தமிழ்நாட்டு மக்கள் பாஜகவுக்கு ஒருபோதும் தமிழ் மண்ணில் இடம் அளிக்க மாட்டார்கள்.

காங்கிரஸின் தேசிய தலைவர்கள் தமிழகத்துக்கு வருவதற்கான இடங்களும், தேதிகளும் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும். தேர்தல் கருத்துக்கணிப்புகளால் எங்களுக்கு பின்னடைவு கிடையாது. இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கிறது. தேர்தல் முடிவில் இந்தியா கூட்டணியே வெற்றி பெறும்” என்றார்.

* தமிழ்நாட்டு மக்கள் பாஜகவுக்கு ஒருபோதும் தமிழ் மண்ணில் இடம் அளிக்க மாட்டார்கள்

Related Stories: