திருவனந்தபுரம்: கேரளாவில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்டத் தேர்தல் நேற்று நடைபெற்றது. நாளை (11ம் தேதி) 2ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. நேற்று திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், கோட்டயம் மற்றும் இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 595 உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நேற்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தது. முதல்கட்டத் தேர்தலில் 71 சதவீதம் வாக்குகள் பதிவாயின.
