நாடாளுமன்றத் துளிகள்

* ஓய்வூதியம் குறித்து ஆலோசனை
மக்களவையில், கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட துணை கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே அளித்த பதிலில்,தற்போது அமைப்பு சாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் வரும் நாட்களில் ஓய்வூதியம் கிடைக்கச் செய்வது குறித்து தொழிலாளர் துறையில் ஆலோசனைகள் நடந்து வருகின்றன.ஏனெனில் உழைக்கும் அனைவரும் ஓய்வூதியம் பெற வேண்டும். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மற்றும் ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகம் ஆகியவற்றின் வரம்பிற்குள் கொண்டு வருவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றது\\” என்றார்.

* மேற்கு ஆசியா நெருக்கடி
மக்களவையில் பூஜ்ய நேரத்தின்போது மேற்கு ஆசிய விவகாரம் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது. தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் மோடி மேற்கு ஆசிய நெருக்கடி குறித்து அறிக்கை அளித்துள்ளார். எப்போதெல்லாம் ஒரு நெருக்கடி ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் அனைவரும் ஒன்றிணைந்து நிற்கிறோம். இதில் அரசியல் ஏதும் இருப்பதில்லை\\” என்றார்.

* ஓபிசி இடஒதுக்கீடு தவறாக பயன்படுத்தப்படுகிறது
மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தின்போது ஓபிசி பிரச்னையை பாஜ எம்பி லட்சுமண் எழுப்பினார். அப்போது ஓபிசிக்கான இடஒதுக்கீடு மதத்தின் பெயரால் தவறாக பயன்படுத்தப்படுவதாக தெரிவித்தார். மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு குறித்து விரிவான மறுஆய்வு மேற்கொள்ளுமாறு மாநிலங்களுக்கு அரசு உத்தரவிடவேண்டும்\\” என்றார். அவரது கருத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பலர் அவையில் இருந்து வெளி நடப்பு செய்தனர்.

* பிஜூ ஜனதா தளம் வெளிநடப்பு
மாநிலங்களவையில் ஒடிசா முன்னாள் முதல்வர் பிஜூ பட்நாயக் குறித்து பாஜ தலைவர் நிஷிகாந்த் துபே இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக கூறப்படுவதற்கு பிஜூ ஜனதா தள உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிஜூ ஜனதாதள எம்பி சஸ்மித் பத்ரா, பிஜூ பட்நாயக்கை துபே ஒரு சிஐஏ முகவர் என்று அழைத்துள்ளார். ஆளும் கட்சி எந்த அளவுக்கு தரம் தாழ்ந்துவிட்டது என்பதற்கு இதுவே சான்று. இது மிகவும் வெட்கக்கேடாது. பிஜூ ஜனதாதளம் இதனை வன்மையாக எதிர்க்கிறது. அதைக் கண்டிக்கும் வகையில் அவையில் இருந்து வெளிநடப்பு செய்கிறோம்\” என்றார். தொடர்ந்து பிஜூ ஜனதா தள எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

Related Stories: