புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் தள பதிவில், ‘‘கடந்த 87 நாட்களாக பீகாரின் முசாபர்பூரில் 12ஆயிரம் தொழிலாளர்கள் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை கிடைக்காததால் போராட்டம் நடத்தி வருகின்றனர். உ பி , அரியானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் நாட்டின் பிற மாநிலங்களிலும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை ஒழித்ததன் மூலமாக கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வேலை செய்யும் உரிமையை பாஜ ரத்து செய்துவிட்டது. மேலும் அவர்கள் மிகவும் பெரிதாக பேசி விளம்பரப்படுத்திய அந்த புதிய திட்டத்திற்கான எந்த தடயமும் நடைமுறையில் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
