வாரணாசியில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற இளைஞர் கைது

வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம் மௌ மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது அட்னன்(26). இவர் கடந்த சனிக்கிழமை(29ம் தேதி) இரவு பெங்களூருவில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு இண்டிகோ விமானத்தில் சென்றார். ஆனால், முகமது அட்னன் விமானம் தரையிறங்கும் முன்பாகவே, இரண்டுமுறை விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்றுள்ளார். இதனை கண்டு பிற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விமான பணியாளர்கள் அந்த இளைஞரை பிடித்து அமர வைத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து காவலர்கள் கூறுகையில், “முகமது அட்னன் முதல்முறையாக விமானத்தில் பயணம் சென்றதால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக அவர் அவ்வாறு செய்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.

Related Stories: