ராஜ்பவன் இனிமேல் லோக்பவன் மேற்குவங்க கவர்னர் மாளிகை பெயர் மாற்றம்: நாடு முழுவதும் மாற்றம் செய்ய உள்துறை அமைச்சகம் உத்தரவு

கொல்கத்தா: மேற்குவங்க கவர்னர் மாளிகையான ராஜ்பவன் தற்போது லோக்பவன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்க கவர்னர் மாளிகையான ராஜ்பவன், ‘லோக் பவன்’ (மக்களின் மாளிகை) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் வேறு பகுதிகளில் அமைந்துள்ள கவர்னரின் இல்லங்கள் அனைத்தும் லோக் நிவாஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக நவ.25 அன்று உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்தியா முழுவதும் உள்ள ராஜ்பவன்கள் ‘லோக் பவன்’ என்றும், ராஜ் நிவாஸ் ‘லோக் நிவாஸ்’ என்றும் ஒரே மாதிரியாகப் பெயர் மாற்றப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து முதல் மாநிலமாக மேற்குவங்கத்தில் கவர்னர் மாளிகை பெயர் லோக்பவன் என்று மாற்றப்பட்டுள்ளது.

Related Stories: