செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மேலும் 12 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்

 

சென்னை: அதிமுகவில் பதவி பறிக்கப்பட்ட மேலும் 12 பேரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் மேலும் 12 பேர் நீக்கம் செய்யப்பட்டனர். முன்னாள் எம்.பி. சத்தியபாமா, ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், குறிஞ்சிநாதன் (கோபி மேற்கு ஒன்றியம்), ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன், முன்னாள் ஒன்றிய தலைவர்கள் மவுதீஸ்வரன், பி.யூ.முத்துசாமி, அத்தாணி பேரூர் கழக செயலாளர் எஸ்.எஸ்.ரமேஸ் நீக்கம் செய்யப்பட்டார்.

Related Stories: