சும்மா கிடக்குது அம்மா ஜிம்

போடி, டிச.31: போடி அருகே உடற்பயிற்சி கூடம் பராமரிப்பின்றி மூடி கிடப்பதால் ரூ.30 லட்சம் நிதி வீணாகியுள்ளது. போடி அருகே சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் பொட்டிபுரம் ஊராட்சி உள்ளது. இங்குள்ள இராமகிருஷ்ணாபுரத்தில் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் உடற்பயிற்சி செய்ய ரூ.30 லட்சம் நிதியில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் கடந்த 2018ம் ஆண்டு கட்டி பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது.   சில மாதங்கள் செயல்பட்டு வந்த நிலையில் பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் மூடப்பட்டது. இதனால் உடற்பயிற்சி உபகரணங்கள் எல்லாம் உடைந்து வீணாக கிடக்கிறது. மேலும் உடற்பயிற்சி கூடம் குடிமகன்களின் கூடாரமாகவும் மாறி கிடக்கிறது. எனவே உடற்பயிற்சி கூடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: