சாலை பாதுகாப்பு வார விழா

ஆறுமுகநேரி, பிப்.13: சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது.  விழாவிற்கு டிசிடபிள்யூ நிறுவனத்தின் செயல் உதவித் தலைவர் ஜெயக்குமார்(பணியகம்) தலைமை வகித்தார்.  தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் சென்ற வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு வண்ண ஸ்டிக்கர் ஒட்டும் பணியை துவக்கி வைத்தார். விழாவில் நிறுவனத்தின் மூத்த பொது மேலாளர்கள், பொது மேலாளர்கள் மற்றும் அனைத்து துறை தலைவர்களும் பங்கேற்றனர். ஏற்பாடுகளை டிசிடபிள்யூ நிறுவனத்தின் பாதுகாப்பு துறையினர் செய்திருந்தனர்.

   தூத்துக்குடி: தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டிகள் நடந்தன. வ.உ.சி கல்லூரி முன்பு புறப்பட்டு தருவை மைதானம் வந்தடைந்தது. போட்டியை எஸ்பி., முரளிராம்பா, கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் திரளான பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். மாரத்தான் ஓட்டம் முக்கிய வீதிகளின் வழியாக வந்து முத்துநகர் கடற்கரையை அடைந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு தூத்துக்குடி டிஎஸ்பி., பிரகாஷ் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். இதில் மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் ரேணியஸ் ஜேசுபாதம், காவல் கட்டுப்பாட்டு அறை இன்ஸ்பெக்டர் ஜென்சி,  போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சிசில்,எஸ்ஐகள் ரவிக்குமார், மயிலேறும் பெருமாள்  மற்றும் காவல்துறையினர், மாணவ, மாணவியர், அரிமா, ஜேசீஸ் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.    கோவில்பட்டி: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் என்.எஸ்.எஸ்.திட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா 2 நாட்கள் நடந்தது. கோவில்பட்டி அரசு போக்குவரத்து கழக டிப்போ கிளை மேலாளர் ரமேசன் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார். பின்னர் அவர் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் அணிவதன் அவசியம் பற்றி பேசினார்.

தொடர்ந்து டிப்போ கிளை உதவி பொறியாளர் சரவணன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி பேசினார். 2வது நாளில் நடந்த விழாவில் நாலாட்டின்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி, மாணவர்களின் இருசக்கர வாகனங்களின் முகப்பு விளக்குகளில் விபத்தினை தடுத்திடும் வகையில் பிரதிபலிப்பான் ஸ்டிக்கர்களை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். காவல் அலுவலர் திலீப் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி பேசினார். ஏற்பாடுகளை கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம், முதல்வர் சண்முகவேல் மற்றும் திட்ட அலுவலர்கள் வழிகாட்டுதலின்படி திட்ட மாணவர்கள் செய்திருந்தனர்.கோவில்பட்டியில்  அம்மன் ஓட்டுநர் பயிற்சி பள்ளி, ஆஞ்சநேயர் ஓட்டுநர் பயிற்சி  பள்ளி சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா நடந்தது. பயிற்சி பள்ளி மேலாளர் அழகுமீனாட்சி தலைமை வகித்தார். உரிமையாளர் மாரிமுத்து வரவேற்றார். திருத்தணி  விஆர் பாலாஜி டிரைவிங் டெக்னாலஜி விரிவுரையாளர் ராதாகிருஷ்ணன் சாலை  பாதுகாப்பு பற்றி பேசினார். எஸ்ஐ சுடலைமுத்து, வாகன ஓட்டுநர்கள், பயிற்சி  பெறும் மாணவ, மாணவிகளுக்காக ஓட்டுநர் கையேடு வழங்கினார். விபத்துக்களை தவிர்க்கும் வகையில்  ஹெல்மெட் அணிந்து செல்வதன் அவசியம் பற்றி பேசினார். ஆஞ்சநேயர் ஓட்டுநர்  பயிற்சி பள்ளி தர் நன்றி கூறினார்.

Related Stories: