கோவில்பட்டியில் இருபெரும் விழா

கோவில்பட்டி, செப். 25: கோவில்பட்டியில் மாவட்ட   திருக்குறிப்பு தொண்டர் சலவை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் சமுதாய பாதுகாவலர் எத்திராஜ் பிறந்தநாள் விழா, கல்வியில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா என இருபெரும் விழா நடந்தது.  இதையொட்டி பாரதிநகர்   பசுவந்தனைரோடு 8வது தெரு சலவை துறையில் உள்ள எத்திராஜ் படத்திற்கு நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். தொடர்ந்து நடந்த விழாவிற்கு பாரதிநகர் சங்கத் தலைவர் அய்யாத்துரை,  மாவட்டத்  தலைவர் அய்யனார்  தலைமை வகித்தனர். மாவட்டச் செயலாளர் மகாராஜன்,  மாநில  பொதுக்குழு உறுப்பினர் சுருளிராஜன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  பாலமுருகன்,  மாவட்ட அமைப்பாளர் வேல்முருகன்  முன்னிலை வகித்தனர்.  மாரியப்பன்,  செல்லத்துரை  வரவேற்றனர். திருக்குறிப்பு மகாசபை மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடாசலபதி,நெல்லை மாவட்ட நிர்வாகிகள் மாரியப்பன், பேச்சிமுத்து, ஜெயக்குமார், சங்கரசுப்பு ஆகியோர்  பேசினார். இதையடுத்து கல்வியில் சிறந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு   வழங்கப்பட்டது. கண்ணன் நன்றி கூறினார். விழாவில், சலவை தொழிலாளர்களுக்கு   அரசாணைப்படி மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும். பழுதானநிலையில் உள்ள அனைத்து சலவைத்துறைகளையும்   புதுப்பித்து நவீன சலவைகூடங்களாக மாற்ற வேண்டும். சலவை தொழிலாளர்களில்   வீடில்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் வீடுகள் கட்டித்தர வேண்டும். வண்ணார் இனமக்கள் அனைவருக்கும் பொதுவான ஒரே சாதிச்சான்றிதழ்   ‘சூரியகுலத்தார்’ என வழங்க வேண்டும். எத்திராஜிற்கு   அரசு மணி மண்டபம் கட்டித்தருவதோடு அடுத்த ஆண்டு 100வது குருபூஜையை   அரசே நடத்த வேண்டும். மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: