விலைவாசி உயர்வை குறைக்க கோரி ஈரோட்டில் அதிமுக ஆர்ப்பாட்டம்

 

ஈரோடு, ஜூலை 21: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அதிமுக சார்பில் ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு, வீரப்பன் சத்திரம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.வி.ராமலிங்கம், கே.சி.கருப்பணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், உயர்ந்து வரும் காய்கறி விலைகளை கட்டுப்படுத்த வேண்டும்.

தொடர்ந்து மக்கள் மீது சுமத்தப்பட்டு வரும் மின் கட்டண உயர்வு, குப்பை வரி, குடி நீர் வரி உள்ளிட்ட வரியினங்கள் உயவர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என வலியுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே.சி.பழனிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு, பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயகுமார், பவானிசாகர் எம்.எல்.ஏ. பண்ணாரி, பெரியார் நகர் பகுதிச் செயலாளர் மனோகரன், பெரியார் நகர் பகுதி அவை தலைவர் மீன் ராஜா, மாணவரணி இணைச் செயலாளர் நந்தகோபால், ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் வீரகுமார், நிர்வாகிகள் முருகானந்தம், சிவசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post விலைவாசி உயர்வை குறைக்க கோரி ஈரோட்டில் அதிமுக ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: