கல்குவாரியை அளவீடு செய்ய நீதிமன்றம் தடை உத்தரவு

 

கோபி,ஜூலை5: கோபி அருகே தனியார் கல்குவாரியை அளவீடு செய்வதற்கு நீதிமன்றம் தடை விதித்தது. கோபி அருகே உள்ள கவுண்டம்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரி கோயில் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். மேலும் கல்குவாரி செயல்படுவதை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து கல்குவாரியை அளவீடு செய்ய வருவாய்த்துறை மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகள் முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று காலை கோபி ஆர்டிஓ கண்ணப்பன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள்,பொதுப்பணித்துறை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சத்தி டி.எஸ்.பி சரவணன் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் தனியாருக்கு சொந்தமான கல்குவாரியை அளவீடு செய்ய சென்றனர்.

அப்போது கல்குவாரி முறையான அனுமதி பெற்று நடைபெற்ற வருவதாகவும், கல்குவாரியை அளவீடு செய்ய நீதிமன்றம் விதித்துள்ளதாக கூறி தடை உத்தரவை கல்குவாரி உரிமையாளர் தரப்பில் வழங்கப்பட்டது. தடை உத்தரவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் கல்குவாரியை அளவீடு செய்யாமல் திரும்பி சென்றனர்.

 

The post கல்குவாரியை அளவீடு செய்ய நீதிமன்றம் தடை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: