225 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்

 

ஈரோடு,ஜூன்28:ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற 30ம் தேதி காலை 11 மணி முதல் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.கூட்டம் நடைபெறும் இடம், நேரம், ஆகியன தொடர்புடைய கிராம ஊராட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.

இக்கூட்டத்தில் பழுதடைந்த ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டம் மற்றும் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் செயல்படுத்திட கிராம அளவிலான குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.அனைத்து கிராம ஊராட்சிகளும் கிராம சபைக் கூட்டங்கள் முறையாக நடைபெறுவதைக் கண்காணிக்கும் பொருட்டு வட்டார அளவில் உதவி இயக்குநர் நிலையில் பற்றாளர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post 225 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: