‘தமிழ்நாடு நாள்’ கட்டுரை, பேச்சு போட்டிக்கு அழைப்பு

 

ஈரோடு, ஜூலை 6: ‘தமிழ்நாடு நாள்’ விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் பங்கேற்க மாணவ, மாணவிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் அண்ணாவால் ‘தமிழ்நாடு’ என பெயர் சூட்டிய நாள் ஜூலை 18. இதனை நினைவு கூறும் விதமாக அன்றைய தினம் ‘தமிழ்நாடு நாளாக’ கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழ் வளர்ச்சி துறை மூலமாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

அதன்படி வரும் 9ம் தேதி ஈரோடு கலைமகள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 10 மணிக்கு பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை,பேச்சுப்போட்டிகள் நடக்கிறது.இப்போட்டிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ,மாணவிகள் பங்கேற்கலாம்.தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் பரிந்துரை கடிதம் பெற்று வர வேண்டும்.

‘ஆட்சி மொழி தமிழ்’ என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும், ‘குமரி தந்தை மார்ஷல் நேசமணி, தென்னாட்டு பெர்னாட்ஷா பேரிறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி’ ஆகிய தலைப்புகளில் பேச்சு போட்டிகள் நடைபெற உள்ளன.இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவில் முதல் 3 இடங்களுக்கு தலா ரூ. பத்தாயிரம், ஏழாயிரம், 5ஆயிரம் பரிசு வழங்கப்படும்.

The post ‘தமிழ்நாடு நாள்’ கட்டுரை, பேச்சு போட்டிக்கு அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: