அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்ய மனு

 

ஈரோடு, ஜூலை 2: கட்டிமுடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்து தரக்கோரி குறைதீர்க்கும் கூட்டத்தில் நேற்று பொது மக்கள் மனு அளித்தனர். இதுகுறித்து, சூளையை அடுத்துள்ள அன்னை சத்யா நகர் குடிசை மாற்று வாரிய வீட்டில் வசித்து வந்தவர்கள் கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் 200க்கும் மேற்பட்டோர் அன்னை சத்யா நகரில் குடிசை மாற்று வாரிய வீட்டில் வசித்து வந்தோம்.

30 ஆண்டுகள் கடந்த நிலையில் வீடுகளில் வசிப்பதற்கு தகுதி இல்லை என சான்று வழங்கி எங்களை காலி செய்து விட்டு அந்த பழைய கட்டிடங்களை இடித்து விட்டு புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டினர். இந்நிலையில், தற்போது 330 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. நாங்கள் காலி செய்த போது ரூ.8 ஆயிரம் நிவாரணமாக கொடுத்தனர். கட்டி முடித்ததும் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும் என கூறினர். தற்போது, பணிகள் முடிந்து ஓராண்டுக்கும் மேலாகிவிட்டது. எனவே, புதிய அடுக்குமாடி குடியிருப்பில் எங்களுக்குரிய வீடுகளை விரைவில் ஒதுக்கீடு செய்யவேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

The post அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்ய மனு appeared first on Dinakaran.

Related Stories: