திருப்புவனம், ஜூன் 7: பூவந்தி அருகே படமாத்தூர் ஏ.ஆர்.உசிலம்பட்டி பேச்சியம்மன் நகரை சேர்ந்தவர் முத்துராஜா. இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி இந்திரா. இவர்களின் மகள் பவிஷ்கா ( 6) தனியார் பள்ளியில் படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடித்து வீட்டுக்கு வந்த பவிஷ்கா வீட்டிலிருந்து எதிர்ப்பக்கம் ஐஸ் வாங்குவதற்காக சாலையை கடந்துள்ளார். அப்போது வேகமாக வந்த சரக்கு வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே சிறுமி பலியானார். பூவந்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே ஊரை சேர்ந்த வேன் டிரைவர் பாலாஜியை(23) கைது செய்து விசாரிக்கின்றனர்.
The post விபத்தில் சிறுமி பலி appeared first on Dinakaran.
