மாணவர்களின் படைப்பாற்றலை வெளிகொணர நெடும்பலம் அரசுப் பள்ளியில் வானவில் மன்ற நிகழ்வு

திருத்துறைப்பூண்டி, டிச. 15: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வானவில் மன்ற நிகழ்வு நடைபெற்றது. தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். ஸ்டெம் எனப்படும் அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித நிகழ்வு குறித்து பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் மாணவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வரும் பொருட்டு பள்ளிகள் தோறும் வானவில் மன்றம் செயல்பட்டு வருகிறது.நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வானவில் மன்ற சிறப்பு நிகழ்வாக அறிவியல் சோதனைகள் வானவில் மன்ற பொறுப்பாளர் நித்யா செய்து காண்பித்தார்.

ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு முடிய உள்ள மாணவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் யோகராஜன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வரவேற்புரை நிகழ்த்தினார். முடிவில் ஆசிரியை வினோதினி நன்றி கூறினார். இதில் 166 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: