நீடாமங்கலத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு

நீடாமங்கலம், டிச. 15: நீடாமங்கலம் பகுதி மையங்களில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட மையங்களில் நேற்று புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட மைய கற்போருக்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடைபெற்றது. 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாத 600 கற்போர் 30 மையங்களில் இத்தேர்வை எழுதினர். தேர்வினை தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நடத்தினர்.

இத்தேர்வினை திருவாரூர் மாவட்டக் இடைநிலை கல்வி அலுவலர் ராஜேஸ்வரி, நீடாமங்கலம் வட்டாரக்கல்வி அலுவலர்கள் இன்பவேணி, மணிகண்டன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் சத்யா, ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆனந்தன் மற்றும் ராதிகா ஆகியோர் பார்வையிட்டனர். இத்திட்டமானது தமிழ்நாட்டை முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாற்றுவதனை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: