மாணவர்களுக்கு விளையாட்டு மையம்

பெரம்பலூர்,ஆக.14: பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் விடுதியின் முன்பு காலியாக உள்ள பகுதியில் மாணவர்களுக்கு விளையாட்டு மையம் அமைத்திட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருக்கு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தினார்.

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் சிலோன் காலனி பகுதியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் செயல்பட்டு வரும், பணிபுரியும் மகளிர்களுக்கான “தோழி“ விடுதியைப் பார்வையிட்ட மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் அங்கு பெண்கள் தங்குவதற்கு போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா என்றும், குடிநீர் முறையாக வழங்கப் படுகிறதா என்றும் அங்கு தங்கியிருந்தவர்களிடம் கேட்டறிந்தார்.

சிசிடிவி கேமரா, பயோமெட்ரிக் வருகை பதிவு மற்றும் வைஃபை வசதி, தங்கும் அறைகள் உள்ளிட்டவை களை மாவட்டகலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்து, விடுதியில் தங்கியுள்ள மகளிரிடம், விடுதியில் ஏதேனும் வசதிக் குறைபாடுகள் உள்ளதா என்று கேட்டறிந்தார். பின்னர், பெரம்பலூர் அரசு இசைப்பள்ளி அருகே 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு, தற்போது பழுதடைந்த நிலையில் பயன்பாட்டில் இல்லாத ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியின் பழுதடைந்த பகுதிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு, விடுதியை பாதுகாப்பாக இடிப்பது, புதிய விடுதியைக் கட்டுவது, அதற்கான திட்ட மதிப்பீடு களைத் தயார் செய்வது உள்ளிட்ட பணிகளை தொடர்புடைய அலுவலர்கள் விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

தொடர்ந்து அம்மாப் பாளையம் செல்லும் சாலையில், அன்னை நகர் பகுதியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் இல்லத்தினை (Children Charitable trust) பார்வை யிட்டு, மையத்தில் குழந்தைகள் தங்குவதற்கு போதுமான இடவசதி உள்ளதா, பாதுகாப்பு வசதி, உணவு தயார் செய்யும் கூடங்கள் சுகாதாரமாக பராமரிக்கப்படுகின்றதா, குழந்தைகள் இல்லம் செயல்படுவதற்கான அரசு அனுமதி சான்றிதழ், கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு சேவை களை மாவட்டக் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அம்மா பாளையத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல பள்ளி மாணவியர் விடுதியில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்து, பழுதடைந்துள்ள விடுதி காப்பாளினி தங்கும் கட்டிடத்தை முறை யாக அகற்றிடவும், மாணவி களுக்கு தயார் செய்யப் படும் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, அம்மாப்பாளையத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது மக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள், புற நோயாளிகளின் வருகைப் பதிவேடு மற்றும் மருத்துவ பதிவேடுகள், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, ஆய்வுக்கூடம் பகுதி, உள்நோயாளிகளின் பிரிவு உள்ளிட்டபகுதிகளில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் தொடர்பாக மாவட்டக் கலெக்டர் நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், அம்மாபாளையத் தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல பள்ளி மாணவர் விடுதியில் மாணவர்கள் தங்கும்அறைகள், சமையற்கூடங்கள், உணவு பட்டியலின் படி உணவு தயார் செய்யப்பட்டு வருகிறதா என மாவட்டக் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விடுதியின் முன்பு காலியாக உள்ள பகுதியில் மாணவர்களுக்கு விளையாட்டு மையம் அமைத்திட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் (பொ) ஜெய, ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வாசுதேவன், தனிவட்டாட்சியர் (ஆதிந) அனிதா, பெரம்பலூர் தாசில்தார் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post மாணவர்களுக்கு விளையாட்டு மையம் appeared first on Dinakaran.

Related Stories: