பெரம்பலூர் கலெக்டர் தலைமையில் அரசு அலுவலர்கள் சமூகநீதி நாள் உறுதி ஏற்பு

 

பெரம்பலூர்,செப்.17: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு சமூகநீதி நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடந்தது. பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரியார் பிறந்தநாளையொட்டி நடந்த சமூக நீதி நாள் உறுதி மொழி நிகழ்ச்சி கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடந்தது. அதில், அனைத்துத் துறை அரசுஅலுவலர்களும் உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டனர்.

அதில், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பண்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறை யாகக் கடைப்பிடிப்பேன். சுயமரியாதை ஆளுமைத் திறனும் பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கை களுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன். மானுடப் பற்றும் மனிதாபி மானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்.

சமூக நீதியையே அடித்தள மாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதி யேற்கிறேன்’ என்ற உறுதி மொழியினை மாவட்டக் கலெக்டர் வாசிக்க, அவரைத் தொடர்ந்து, அனைத்துத்துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வடி வேல் பிரபு, மாவட்டக் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) வைத்தியநாதன், தனித் துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கார்த் திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூர் கலெக்டர் தலைமையில் அரசு அலுவலர்கள் சமூகநீதி நாள் உறுதி ஏற்பு appeared first on Dinakaran.

Related Stories: