பெரம்பலூர்,செப்.13: பாளையம், குரும்பலூர் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் (கிராமியம்) செல்வராஜ் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட 110/22 கே.வி மங்கூன் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (13ம்தேதி) நடைபெறுகிறது.
இதனால் மங்கூன் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பாளையம், குரும்பலூர், மூலக்காடு, ஈச்சம்பட்டி, புது ஆத்தூர், இலாடபுரம், மேலப்புலியூர், அம்மா பாளையம், களரம்பட்டி, மங்கூன், நக்கசேலம், அடைக்கம்பட்டி, புது அம்மாபாளையம், டி. களத்தூர் பிரிவு ரோடு, சிறுவயலூர், குரூர், மாவிலிங்கை, விராலிப்பட்டி, கண்ணா பாடி, கீழக்கணவாய், வேலூர், சத்திரமனை, பொம்மனப்பாடி ஆகிய கிராமப்புற பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடிவடையும் நேரம் வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
The post பாளையம், குரும்பலூரில் இன்று மின்தடை appeared first on Dinakaran.