பெரம்பலூர், செப். 12: சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரிக்கு “நான் முதல்வன்” வேலைவாய்ப்பில் சிறந்த செயல்திறன் கொண்ட நிறுவனம் என்ற விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் “நான் முதல்வன்”, கல்வி நிறுவனத் தலைவர்களுடன் நடைபெற்ற மாநில அளவிலான கருத்தரங்கில் “நான் முதல்வன்” வேலைவாய்ப்பில் சிறந்த செயல்திறன் கொண்ட நிறுவனம் என்ற விருதை பெற்றதற்காக சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் சீனிவாசன் பாராட்டினார். கல்லூரி முதல்வர் நா.வெற்றிவேலன், கல்வி முதன்மையர்வ.சந்திரசௌத்ரி, துறைத்தலைவர்கள் ஆகியோர் வாழ்த்துக்கள் தெரிவித்தார். அறக்கட்டளை உறுப்பினர் ராஜபூபதி உடனிருந்தார்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் “நான் முதல்வன்”, கல்வி நிறுவன தலைவர்களுடன் மாநில அளவிலான கருத்தரங்கம் 04.09.2024 அன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழக மேலாண்மை இயக்குனர் இன்னொசன்ட் திவ்யா கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். இக்கருத்தரங்கில் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், கரூர், புதுகோட்டை, நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 45 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள், 165 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 56 பல் தொழில் நுட்ப கல்லூரிகளை சேர்ந்த கல்லூரி நிறுவனத் தலைவர்கள், முதல்வர்கள் , நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வேலை வாய்ப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் திறன் மேம்பாட்டு படிப்புகள், சிறப்பாக செயல்பட்டு வேலைவாய்ப்ைப கல்லூரிகள் மற்றும் சிறப்பாக செயல்பட்ட நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பில் சிறந்த செயல்திறன் கொண்ட நிறுவனம் என்ற விருது வழங்கி கவுரப்படுத்தினர்.
The post அயன்பேரையூர் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரிக்குசிறந்த செயல்திறன் நிறுவன விருது appeared first on Dinakaran.