பெரம்பலூர், செப்.14: பெரம்பலூர் எடத்தெரு மகா மாரியம்மன் மற்றும் வல்லப விநாயகருக்கு வருடாபிஷேக விழா நடைபெற்றது. பெரம்பலூர் நகரத்திலுள்ள எடத்தெருவில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் வல்லப விநாயகருக்கு நேற்று (13ம் தேதி) 5ம் ஆண்டு (கும்பாபிஷேகம்) வருடாபிஷேக விழா நடைபெற்றது. இதைமுன்னிட்டு காலை 10.15 மணியளவில் பால், தயிர், சந்தனம், பழ வகைக ளுடன், வாசனை திரவியங் களுடனும் அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் பகல் 1மணி அள வில் மங்கள வாத்தியம் முழங்க மகா தீபாராதனை காண்பித்து, பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை ராமர் மற்றும் ராஜேஷ் பூசாரிகள் செய்திருந்தனர். நிகழ்வில் முன்னாள் அறங்காவலர் கள் வைத்தீஸ்வரன், தர்ம ராஜன்,காரியக்காரர் பழனி யப்பன், அன்னை பருவதம் பள்ளி தாளாளர் கணேசன், சிவா குழும உரிமையாளர் சிவராமலிங்கம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தியுடன் அம் மனை வழிபட்டனர்.
The post பெரம்பலூர் எடத்தெரு மகா மாரியம்மன், வல்லப விநாயகருக்கு வருடாபிஷேக விழா appeared first on Dinakaran.