பெரம்பலூர், செப். 12: பெரம்பலூர் மாவட்டத்தில் விதைப்பண்ணை அமைத்து கூடுதல் லாபம் பெறலாம் என்று பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கீதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பெரம்பலூர் மாவட்டத்தில் சராசரியாக நெல் 7326 எக்டர் மற்றும் சிறு தானியங்கள் 66727 எக்டர், பயறுவகைப் பயிர்கள் 1000 எக்டர் மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்கள் 2864 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சாகுபடி செய்யப்படும் பயிர்களில் கூடுதல் லாபம் பெற வேளாண்மைத் துறை மூலம் வழிகாட்டுதல் வழங் கப்படுகிறது. ஆராய்ச்சி நிலையங்கள் மூலம் பெறப் படும் வல்லுநர் விதைகள் முன்னோடி விவசாயிகளுக்கு வழங்கப் பட்டு விதைப்பண்ணையாக பதிவு செய்து, களப் பணியாளர்களின் வழி காட்டுதல் மற்றும் கண்காணிப்பில் உயர் தொழில் நுட்பங்களை பின் பற்றி சாகுபடி மேற் கொண்டு விதைகள் உற் பத்தி செய்யப்படுகிறது.
அவ்வாறு செய்யும் போது சராசரியாக பெறும் மகசூலைவிட கூடுதலாக மகசூல் ஈட்ட முடியும். அத்துடன் விதைப் பண்ணை மூலம் பெறப் படும்விதைகளுக்கு சந்தை விலையைவிட அரசின் டான்சிடா திட்டத்தின் மூலம் கூடுதலான கொள்முதல் விலை பெற முடியும். இதனால்விவசாயிகளுக்கு நல்ல வருவாய் ஈட்ட முடியும். நடப்பாண்டில் விதைப் பண்ணை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினருக்கு விதைப்பண்ணை அமைத்து பயன்பெற தனி ஒதுக்கீடு வழங்கப் பட்டுள்ளது. எனவே நடப்பு ஆண்டில் நெல், சிறுதானியங்கள் மற்றும் எண்ணெய்வித்துப் பயிர்கள் சாகுபடி செய்யும் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியின விவசாயிகள் பெரம்பலூர் மற்றும் ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகிப் பயனடையலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
The post பெரம்பலூர் மாவட்டத்தில் விதைப்பண்ணை அமைத்து கூடுதல் லாபம் பெறலாம் appeared first on Dinakaran.