பெரம்பலூர், செப். 19: பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மாவட்ட எஸ்பி தலைமையில் நடை பெற்ற சிறப்பு மனுமுகாமில் 41 மனுக்கள் பெறப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், நேற்று (18ம்தேதி) புதன்கிழமை காலை 11மணிக்கு, பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா தலைமை யில் சிறப்பு குறைதீர்க்கும் மனு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் கலந்து கொண்ட மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா பொதுமக்களிடம் நேரடி யாக மனுக்களை பெற்றார்.
இந்த சிறப்பு மனு முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், பாடாலூர், குன்னம், மங்களமேடு, அரும்பாவூர், கை.களத்தூர், வி.களத்தூர், மருவத்தூர் காவல் நிலையங்கள், பெரம்பலூர் மற்றும் மங்களமேடு அனைத்து மகளிர் காவல் நிலையங் கள், மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு, மாவட்ட குற்றப்பிரிவு உள்ளிட்ட அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவு காவல் துறையினர் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு மனு முகாம் மூலம் 41 மனுக்கள் பெற்றப்பட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெறும் எனவும், பொது மக்கள் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறும், மனு விசாரணை முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள், மாவட்ட காவல் அலுவலகம் வருவதற்கு ஏதுவாக மாவட்ட காவல்துறை சார்பில் பாலக்கரையிலிருந்து காவல் அலுவலகத்திற்கும், மீண்டும் காவல் அலுவலகத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கும் செல்ல பேருந்து வசதி செய்யப் பட்டுள்ளது என பெரம்ப லூர் மாவட்ட எஸ்பி முகாமில் தெரிவித்தார்.
The post பெரம்பலூர் சிறப்பு மனு முகாமில் 41 மனுக்களை எஸ்பி நேரடியாக பெற்றார் appeared first on Dinakaran.