பவானிசாகர் அணையிலிருந்துகீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 ஆம் சுற்றுக்கு தண்ணீர் திறப்பு

சத்தியமங்கலம், ஏப்.18: பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்கு இறுதி சுற்று தண்ணீர் நேற்று திறக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை, மொத்தம் 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டதாகும். அணையில் இருந்து கீழ்பவானி பாசனப் பகுதியில் உள்ள 1 இலட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்கு கீழ்பவானி வாய்க்காலில் கடந்த ஜனவரி 21ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை 12 டிஎம்சி க்கு மிகாமல் ஐந்து சுற்றுக்களாக தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கீழ்பவானி வாய்க்காலில் வெளியேற்றப்பட்டு வந்த, நான்காம் சுற்று தண்ணீர் கடந்த 10ம் தேதி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு இறுதி சுற்று தண்ணீர் நேற்று காலை திறக்கப்பட்டது. முதற்கட்டமாக 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு பின்னர் 1500 கன அடியாக படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 800 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 617 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 86.63 அடியாகவும், நீர் இருப்பு 19.4 டிஎம்சி ஆகவும் இருந்தது.

The post பவானிசாகர் அணையிலிருந்து

கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 ஆம் சுற்றுக்கு தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: