அரசு மருத்துவமனையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நாடகம்பள்ளி, கல்லூரிகளில் போதை ஒழிப்பு உறுதிமொழி

ஈரோடு, ஜூன் 27: சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி ஈரோடு அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சர்வதேச போதை பொருட்கள் எதிர்ப்பு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதை பொருள் ஒழிப்பு மற்றும் போதை பழக்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்த விழிப்புணர்வு நாடகம், கலைநிகழ்ச்சிகள், மனித சங்கிலி ஆகியவை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நலப்பணிகள் இணை இயக்குநர் அம்பிகா சண்முகம் தலைமை தாங்கினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேஷ், உறைவிட மருத்துவர் சசிரேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் போதை பழக்கத்தினால் சமுதாயத்தில் ஏற்படும் பாதிப்புகள், உடல்நலம் மற்றும் மனநல பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டதோடு, கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. பின்னர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட மனநல மருத்துவர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஈரோடு, ஜூன் 27: ஈரோட்டில் மாவட்ட காவல் துறை சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஈரோட்டில் உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி மாவட்ட காவல் துறை சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. பேரணியை ஈரோடு ஏடிஎஸ்பி ராஜா ரண வீரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியானது ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானம் முன் துவங்கி, மேட்டூர் சாலை, அரசு மருத்துவமனை ரவுண்டானா, பெருந்துறை சாலை, கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணியில், இடையன்காட்டு வலசு பள்ளி, கலைமகள் பள்ளி, செங்குந்தர் பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள், போலீசார் பங்கேற்று போதை பழக்கத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும், வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர்.

இதில், ஈரோடு மாவட்ட மதுவிலக்கு டிஎஸ்பி சண்முகம், இன்ஸ்பெக்டர்கள் செந்தில் பிரபு, பிரேமா, சரண்யா, ராமராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அரசு மருத்துவமனையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நாடகம்பள்ளி, கல்லூரிகளில் போதை ஒழிப்பு உறுதிமொழி appeared first on Dinakaran.

Related Stories: