திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும்

 

அரியலூர்,பிப்.7:அரியலூர் மாவட்டம், திருமானூரில் தனியார் திருமண மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, கட்சியின் ஒன்றிய பொருளாளர் ஜீவா தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் கலியபெருமாள், ஒன்றிய துணைச் செயலாளர் மருதமுத்து, ஒன்றியக்குழு உறுப்பினர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட குழு உறுப்பினர் ஆறுமுகம் கட்சியின் செயல்பாடுகள், வளர்ச்சி குறித்து பேசினார்.ஒன்றியக்குழு உறுப்பினர் கல்யாணசுந்தரம், ஒன்றியச் செயலாளர் கனகராஜ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பிப்.16ம் தேதி அரியலூரில் நடைபெறும் அனைத்து தொழிற்சங்கங்களின் மறியல் போராட்டத்தில் திரளானோர் பங்கேற்பது. பிப்.27ம் தேதி அரியலூரில் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில் நடைபெறும் கட்சி மாநாடு, தேர்தல் நிதியளிப்பு கூட்டத்தில் திருமானூர் ஒன்றியம் சார்பில் அதிக நிதியளிப்பது மற்றும் அதிகமானோர் கலந்துகொள்வது. திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். போதிய மருந்து, மாத்திரைகளை மாவட்ட சுகாதாரத் துறை வழங்க வேண்டும். திருமானூரிலிருந்து காலை நேரத்தில் தஞ்சாவூர் மற்றும் அரியலூருக்கும் இயங்கி வந்த அரசு பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

The post திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: