சென்னிமலையில் விவசாயிகளுக்கு ராபி பருவ பயிற்சி

 

ஈரோடு,ஜன.6: சென்னிமலையில் விவசாயகிளுக்கு ராபி பருவ பயிற்சி வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை வட்டாரத்தில் வேளாண்மை துறையின்மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள குப்பிச்சிபாளையம் கிராமத்தில் கிராமஅளவிலான வேளாண் முன்னேற்ற குழுவை சார்ந்த விவசாயிகளுக்கு ராபி பருவ பயிற்சியானது வழங்கப்பட்டது. இப்பயிற்சிக்கு ஈரோடு மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர்(நுண்ணீர் பாசனம்) பாமா மணி பங்கேற்று, விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனத்தின் பயன்கள் குறித்தும், மானியவிவரங்கள் குறித்தும் விளக்கம் அளித்தார்.

மேலும் விவசாயிகளுக்கு பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளும், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தார்பாய்களும் மற்றும் கலைஞர் திட்டத்தின் கீழ் உயிர் உரங்களும் விவசாயிகளுக்கு வழங்கினார்கள்.வேளாண்மை உதவி இயக்குனர் சாமுவேல் பங்கேற்று, அங்கக சாகுபடி முறைகள், வேளாண் கருவிகள் மற்றும் கலைஞர் திட்டத்தின் பயன்கள் குறித்து விளக்கம் அளித்தார். துணைவேளாண்மை அலுவலர் பாலாஜி பங்கேற்று ராபி பருவ பயிர் சாகுபடிக்கான தொழில் நுட்பங்கள்,தென்னை மரங்களுக்கு பயிர் பாதுகாப்பு முறைகள்,நுண்ணூட்டங்கள் இடுதல் குறித்த தொழில்நுட்பங்களையும், உழவன் செயலியின் பயன்கள் குறித்தும் பி.எம்.கிஷான் திட்ட வழிமுறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.

வேளாண் அலுவலர் செந்தில் செல்வி பங்கேற்று வேளாண் துறையில் வழங்கப்பட்டு வரும் மானிய திட்டங்கள் குறித்து விளக்கினார். உதவி வேளாண் அலுவலர் வேலுமணி பங்கேற்று, விதை நேர்த்தி செய்தல், உயிர் உரங்கள் மற்றும் உயிரியல் காரணிகள் இடுதல் குறித்து பேசினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் மோகனசுந்தரம் பங்கேற்று மண்வளம், இ-நாம், இ-வாடகை செயலிகள் பயன்படுத்தும் முறைகள் குறித்தும், மண்வள அட்டை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த பயிற்சி முகாமில் குப்பிச்சிபாளையம் கிராம ஊராட்சி தலைவர் பொன்னுசாமி, கிராம ஊராட்சி முன்னேற்ற குழுவின்
உறுப்பினர்களும், விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சிகான ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர்கள் வேலுமணி, தேவி ஆகியோர் செய்திருந்தனர்.

The post சென்னிமலையில் விவசாயிகளுக்கு ராபி பருவ பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: