கோவையில் ஒரு வாரத்தில் 26.97 லட்சம் காலி மதுபாட்டிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது

கோவை, ஏப். 10: கோவையில் ஒரு வாரத்தில் 26.97 லட்சத்துக்கும் மேற்பட்ட காலி மதுபாட்டிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது என டாஸ்மார்க் நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து காலி மதுபாட்டில்களை சாலையோரங்களில் வீசி செல்வதை தடுக்கும் பொருட்டு, டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மதுபான பாட்டில்களிலும் 10 ரூபாய் கூடுதலாக பெறப்பட்ட அதற்கான ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்யப்படும் எனவும் பின்னர் வாடிக்கையாளர்கள் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காலி மதுபான பாட்டில்களை மதுபான் கடைகளில் திருப்பிக் கொடுத்தால் பெறப்பட்ட 10 ரூபாய் மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அறிவிக்கப்பட்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு பத்து ரூபாய் அதிகமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

அதே சமயம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காலி மதுபாட்டில்களை வாடிக்கையாளர்கள் மதுபான கடைகளில் திரும்ப வழங்கிய நிலையில் 10 ரூபாய் திருப்பித் தரப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஆறாம் தேதி வரை இந்த ஒரு வார காலத்தில் 26 லட்சத்து 96 ஆயிரத்து, 71 வாலி மது பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவை வடக்கு மண்டலத்தில் 166 மதுபான கடைகளில் 17,56,997 மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் 12,91,506 மது பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், 4,65,491 மது பாட்டில்கள் திரும்ப வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தெற்கு மண்டலத்தில் 139 கடைகளில் விற்பனை செய்யப்பட்ட 19,24,708 மது பாட்டில்களில் 14,04,565 காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் 5,20,143 மது பாட்டில்கள் திரும்ப வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கோவையில் ஒரு வாரத்தில் 26.97 லட்சம் காலி மதுபாட்டிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது appeared first on Dinakaran.

Related Stories: