வனத்துறை சார்பில் 30 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு

 

கோவை, ஜூலை 3: தமிழ்நாடு வனத்துறையின் கோவை வனக்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோவை வனவியல் விரிவாக்க கோட்டத்தின் மூலம் பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நிதியின் கீழ் தனியார், அரசு இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சூலூர் தாலுக்கா, குமரன்கோட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் வளாகத்தில் 30 ஆயிரம் எண்ணிக்கையிலான வேம்பு, பூவரசு, புங்கன், ஈட்டி, செம்மரம், வேங்கை, நாவல், கொடுக்காபுளி, பாதாம் மற்றும் நெல்லி ஆகிய மரக்கன்றுகளை நடவு செய்யும் விழா நேற்று நடந்தது.

விழாவில் வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். கர்நாடகா பந்திப்பூர் புலிகள் காப்பகம் கள இயக்குனர் பிரபாகரன், மாவட்ட வனஅலுவலர் ஜெயராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இவர்களின் முன்னிலையில், மாணவ, மாணவிகள் மரக்கன்றுகளை கல்லூரி வளாகத்தில் நடவு செய்தனர்.

The post வனத்துறை சார்பில் 30 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு appeared first on Dinakaran.

Related Stories: