கற்பகம் பல்கலைக்கழகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை, ஜூலை 4: கோவை கற்பகம் பல்கலைக்கழகம் மற்றும் காரைக்குடி சிஎஸ்ஐஆர்-மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (சிக்ரி) ஆகியவை இணைந்து ஆராய்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் அறிவு பகிர்வை வளர்ப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் பேட்டரி தொழில் நுட்பம், அரிமானம் மற்றும் அரிமானப் பாதுகாப்பு ஆகியவற்றில் நடைமுறை திறன் மேம்பாட்டை மையமாகக் கொண்டு, கூட்டு ஆராய்ச்சி திட்டங்கள், திறன் மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சி பயிற்சிக்கான கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

கற்பகம் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிக்ரியின் அதி நவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்களைப் பார்வையிடும் வாய்ப்பைப் பெறுவார்கள். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கற்பகம் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வெங்கடாசலபதி மற்றும் சிஎஸ்ஐஆர் – சிக்ரி இயக்குனர் ரமேஷா ஆகியோர் இரு நிறுவனங்களின் புல முதன்மையர்கள் மற்றும் துறை சார் தலைவர்களின் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.

The post கற்பகம் பல்கலைக்கழகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Related Stories: