ஒராட்டுக்குப்பையில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தனியார் நிறுவன பங்களிப்புடன் கட்டப்பட்ட புதிய வகுப்பறையை பேரூராட்சி தலைவர் ரங்கசாமி திறந்து வைத்தார்.

கோவை, ஜூலை 4: கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் கோவை ரயில் நிலையம் எதிரே கீதா ஹால் ரோட்டில் உள்ள அதன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் வி.எம்.சி. மனோகரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் விஜயகுமார், முருகேசன், ஆறுச்சாமி, ஜெயக்குமார், ரங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் வெங்கிடபதி வரவேற்றார். இதில், வரும் ஜூலை 15ம் தேதி காமராஜர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது, ஏழைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. மேலும், பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி பேசியதை முழுமையாக வெளியிடாமல், இருட்டடிப்பு செய்த ஒன்றிய பாஜ அரசை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், நிர்வாகிகள் செல்வபுரம் ஆனந்த், கோவை ஹனீபா, தீரன் கந்தசாமி, பீடம்பள்ளி செல்வராஜ், பேரூர் மயில், ஆலாந்துறை ராஜ்குமார், ரகமத்துல்லா, தாமஸ், குனிசை செல்வம், அருள்அந்தோணி, நசீர்உசேன், துரைமணி, சத்தியநாராயணன், மாரப்பன், பெள்ளாதி சம்பத்குமார், ஆலாந்துறை வெங்கடாசலம், எஸ்.காயத்ரி, தங்கராஜ், பெருமாள்சாமி, சவுந்தர்ராஜ், ராயல் மணி என்கிற மணிகண்டன், கராத்தே ராமசாமி, பி.பாலசுப்பிரமணியம், காமராஜ் என்கிற காளிமுத்து, தங்கமணி, வேலுசாமி, ஐ.எஸ்.மணி, சத்தியமூர்த்தி, ஜமாலுதீன், மோப்பிரிபாளையம் அசோக்குமார், அருண், பள்ளபாளையம் முருகேசன், கிருஷ்ணமூர்த்தி, பொன்னுசாமி, சிவக்குமார், தேசியம் பழனிசாமி, கிருஷ்ணகுமார், அர்ஜுன் கவுரவ், சோ.மணி, கந்தன், பாலசுப்பிரமணியம், வெங்டேஷ், ரமணி, காமராஜ்துல்லா உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், வி.எம்.ரங்கசாமி நன்றி கூறினார்.

The post ஒராட்டுக்குப்பையில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தனியார் நிறுவன பங்களிப்புடன் கட்டப்பட்ட புதிய வகுப்பறையை பேரூராட்சி தலைவர் ரங்கசாமி திறந்து வைத்தார். appeared first on Dinakaran.

Related Stories: