சமூகநலத்துறையில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

 

கோவை, ஜூலை 3: தமிழ்நாடு அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் காலியாகவுள்ள ஒப்பந்த அடிப்படையிலான இளநிலை உதவியாளர் மற்றும் தட்டசர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் கம்ப்யூட்டர் ஆன் ஆபிஸ் ஆட்டோமோஷனில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கோவை மாவட்டத்தை சேர்ந்த 18 வயதிற்கு மேல் 37 வயதிற்கு உட்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். தகுதியான நபர்கள் 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்று சான்றிதழ், தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு தேர்வில் மேல்நிலையில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்கள், கணினியில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் ஆகிய உரிய ஆவணங்கள் மற்றும் சுய விவரத்துடன் வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பங்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

The post சமூகநலத்துறையில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: