எளம்பலூர் பிரம்மரிஷி மலை டிரஸ்ட் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

பெரம்பலூர், ஜூலை 9: வருகிற 14-ஆம் தேதி பள்ளி மாணவ, மாணவி களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடை பெறுகிறது. பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலை மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி வருகிற 14ஆம் தேதி நடைபெறுகிறது. இது பற்றி மகா சித்தர்கள் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் களான தவயோகிகள் சுந்தர மகாலிங்கம், தவசி நாதன் சுவாமிகள் வெளி யிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலை அன்னை சித்தர் ராஜ்குமார் சுவாமிகள் நான்காம் ஆண்டு குரு பூஜை வருகிற 22ம் தேதி நடைபெறுகிறது. இவ் விழாவினை முன்னிட்டு அரசு பள்ளி மாணவ மாண விகளுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, வருகிற 14ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடை பெறுகிறது. இதில் பெரம்ப லூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலக் கூடிய மாணவ மாணவிகள் கலந்து கொள்ளலாம். திருக்குறளில் இருந்து அறத்துப்பால் 38 அதிகாரம், பொருட்பால் 70 அதிகாரம் ஆகியவற்றில் உள்ள 1010 திருக்குறள்களையும் பொருளோடு சொல்லக் கூடிய மாணவ மாணவிக ளில் மூன்று பேர்களைத் தேர்ந்தெடுத்து ரொக்கப் பரிசுகுருபூஜைவிழாவன்று வழங்கப்படுகிறது. இது தொடர்பான மேலும் விவ ரங்களுக்கு 7845289139 மற்றும் 8838388110 ஆகிய செல் போன் எண்களில் தொடர்பு கொண்டு விவரம் அறிந்து கொள்ளலாம் என அந்த அறிவிப்பில் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

The post எளம்பலூர் பிரம்மரிஷி மலை டிரஸ்ட் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: