ஆண்டிபட்டி, தெப்பம்பட்டி கிராமத்தில் சாதனை விளக்க கூட்டம்

ஆண்டிபட்டி, ஜூன் 30: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அருகே உள்ள தெப்பம்பட்டி கிராமத்தில் ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி சார்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பிறந்தநாள் விழா மற்றும் திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் அர்ச்சுனன் தலைமை தாங்கினார். ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் முன்னிலை வகித்தார். மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாண்டியன் மற்றும் தலைமை கழக பேச்சாளர் வர்சினி ஆகியோர் கலந்து சிறப்புரையாற்றினர்.

இதில் தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் மகளிர் கட்டணமில்லா பயணம், நான் முதல்வன் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் புதிய வளர்ச்சிப் பணிகள் தொடங்குவது குறித்தும் பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு பேரூர் செயலாளர் சரவணன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் சேதுராஜா மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post ஆண்டிபட்டி, தெப்பம்பட்டி கிராமத்தில் சாதனை விளக்க கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: