அரசு பள்ளி அருகில் டாஸ்மாக் கடை மூடக்கோரி கலெக்டர் ஆபீசில் மனு

 

ஈரோடு, ஜூலை 26: அந்தியூர் அருகே அரசு பள்ளி அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் ரவிக்குமார் தலைமையில் நிர்வாகிகள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: அந்தியூர் தாலூகா எண்ணமங்கலம் கிராமம் செல்லம்பாளையத்தில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் மாணவிகள் விடுதி செயல்பட்டு வருகின்றது.

இப்பள்ளியில் 500 மாணவ, மாணவிகளும், விடுதியில் 100 மாணவிகளும் தங்கி உள்ளனர். இந்நிலையில் பள்ளி மற்றும் விடுதிக்கு அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. மது பிரியர்கள் சாலையோரத்தில் அமர்ந்து குடித்து வருவதால் மாணவிகள் அச்சத்துடன் சாலையை கடக்க வேண்டி உள்ளது. மேலும் டாஸ்மாக் கடையால் அப்பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post அரசு பள்ளி அருகில் டாஸ்மாக் கடை மூடக்கோரி கலெக்டர் ஆபீசில் மனு appeared first on Dinakaran.

Related Stories: