பதிவு செய்யாமல் இறால் வளா்ப்பு பண்ணை நடத்தினால் நடவடிக்கை

ஈரோடு, ஜூன் 26: ஈரோடு மாவட்டத்தில் இறால் வளர்ப்பு பண்ணைகளை முறையாக பதிவு செய்யாமல் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடல்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையம் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு வெளியே உள்ள பகுதிகளில் நன்னீரில் இயங்கிவரும் வன்னமை இறால் பண்ணைகளை வரன்முறைப்படுத்தி பதிவு செய்யவும், புதுப்பிக்கவும் வழிகாட்டு நெறிமுறைகள் அரசால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வன்னமை இறால் வளர்ப்பு பண்ணைகள் பதிவு செய்தல், உரிமம் புதுப்பித்தல், கண்காணித்தல் மற்றும் முறைபடுத்துதல் தொடர்பாக கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான குழு நியமனம் செய்யப்பட்டு பதிவுகள் மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே கடல்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையம் கட்டுப்பாட்டின் வெளிபகுதிகளில் பதிவு பெறாமல் இயங்கி வரும் நன்னீரில் இயங்கும் வன்னமை இறால் பண்ணை உரிமையாளர்கள் உதவி இயக்குநர் அலுவலகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, 7 வது தளம், கலெக்டர் அலுவலகம் கூடுதல் கட்டிட வளாகம், ஈரோடு – 638 011 தொலைபேசி எண்: 93848 24368 மற்றும் 0424-2221912 அலுவலக எண்ணில் தொடர்பு கொண்டு உரிய படிவத்தில் விண்ணப்பிக்கலாம். ஈரோடு மாவட்டத்தில் உள்ள நன்னீரில் வன்னமை இறால் வளர்ப்பு செய்யும் பண்ணையின் பதிவு கோரி விண்ணப்பித்திட தவறும் பட்சத்தில் தங்களின் நன்னீர் இறால் பண்ணைகளை சட்ட விதிமுறைகள் மீறியதாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post பதிவு செய்யாமல் இறால் வளா்ப்பு பண்ணை நடத்தினால் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: