ஈரோடு மாவட்டம் துவரை சாகுபடி சிறப்பு மண்டலமாக அறிவிப்பு

ஈரோடு, ஜூன் 26: வேளாண் துறை மூலம் துவரை சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், உற்பத்தியை பெருக்கவும் ஈரோடு மாவட்டம் துவரை சாகுபடி சிறப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குநர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில், 250 எக்டேர் செயல் விளக்க திடல் அமைக்க, ரூ.22.5 லட்சம் நிதியானது விவசாயிகளுக்கு மானியமாக வழங்கிட ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

ஒரு விவசாயி அதிகபட்சம், 2 எக்டேர் துவரை செயல் விளக்கத்திட்ட அமைக்கலாம். எக்டேருக்கு ரூ.9,000 மானியமாக வழங்கப்படும். துவரை விதைகள், பயறு வகை நுண்ணூட்டம், உயிர் உரங்கள், 50 சதவீத மானியத்தில் வேளாண் விரிவாக்க மையம் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும். பின்னேற்பு மானியமாக ரூ.8,050 விவசாயிகளின் வங்கி கணக்குக்கு வரவு வைக்கப்படும். விவசாயிகள், துவரை விதைகளை 5க்கு, 3 என்ற அளவில் பாலித்தீன் பைகளில் துவரை நாற்றங்கால் தயார் செய்து, 1 எக்டேர் பரப்பில் நடவு மேற்கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post ஈரோடு மாவட்டம் துவரை சாகுபடி சிறப்பு மண்டலமாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: