மீனம்

(1.8.2026 முதல் 7.8.2026 வரை)

சாதகங்கள்: தன குடும்பாதிபதி செவ்வாய் கேந்திரத்தில் இருக்கிறார். வீடு, நிலம் தொடர்பான காரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பப் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். மனஉறுதி அதிகரிக்கும். குருவின் உச்ச பலத்தால் குழந்தை பாக்கியம், கல்வி, படைப்பாற்றல் ஆகியவற்றில் சிறந்த முன்னேற்றம் உண்டு. கலை, இலக்கியம், ஆன்மிகம் ஆகிய துறைகளில் புகழ் கிடைக்கும். ராசியில் உள்ள சனி ஒரு வகையில் வக்ரம் பெறுவது நல்லதுதான். சில பிரச்னைகள் தானாக தீரும் வாய்ப்பு உருவாகும். புதிய முதலீடுகளில் நல்ல வாய்ப்புகள் உருவாகும்.

கவனம் தேவை: எதிலும் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்க வேண்டாம். 5ல் மூன்று கிரகங்கள் இருப்பதால் குழந்தைகளின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. வணிகங்களில் அளவுக்கு மீறிய தைரியம் காட்ட வேண்டாம். சனி ஜென்ம ராசியில் இருப்பதால் பொறுப்புகள் அதிகரிக்கும். மன அழுத்தம் மற்றும் தாமதங்கள் ஏற்படலாம்.உடல்நலத்தில் அலட்சியம் கூடாது. வாகனப் பயணங்களில் கவனம் தேவை.வரவை விட செலவு சற்று அதிகமாகவே இருக்கும்.

பரிகாரம்: ஸ்ரீ மன் நாராயணனை வழிபடுங்கள்.